கனடாவில் பனி உந்தி விபத்தில் ஒருவர் பலி
கனடாவில் ஸ்னோவ் மொபைல் அல்லது பனி உந்தி விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
55 வயதான நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. டர்ஹம் பகுதியில் புரொக் என்னும் இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மற்றுமொரு பனி உந்தி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பின்னால் சென்ற பனி உந்தி மோதியதில் குறித்த நபர் வீசி எறியப்பட்டதாகவும் அதனால் பலத்த காயங்களுக்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த உயிர்காப்பு பணியாளர்கள் அவசர முதலுதவிகளை செய்த போதிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.