கனடாவில் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்த நபர்
கடனாவில் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொடூரமாக படுகொலை செய்த நபருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கனடாவின் மொன்றியலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 38 வயதான மனைவி, ஐந்து மற்றும் இரண்டு வயதான பிள்ளைகள் ஆகியோரை இந்த நபர் கொலை செய்துள்ளார்.
36 வயதான மொஹமட் அல் பவுலோஸ் எனற் நபரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
மொன்றியலின் ப்ரோசார்ட்டில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியொன்றின் வீடு ஒன்றில் தீ விபத்து காரணமாக பெண் ஒருவரும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்திருந்தனர்.
தீ விபத்தில் சிக்கிய மூன்று பேரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிக்கிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த நபரும் சம்பவத்தில் காயமடைந்திருந்தார் எனவும் அவர் வைத்தியசாலையில் இருந்து காணொளி தொழில்நுட்பம் வாயிலாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இந்தக் கொலைச் எவ்வாறு இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.