டொராண்டோவில் இனக்குரோத அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர் கைது
டொராண்டோவில் இனக் குரோத அடிப்படையில் செயற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகன ஓட்டுனர் ஒருவரைத் தாக்கி, இனம் சார்ந்த கடுமையான சொற்களை உரைத்ததாகக் கூறப்படும் சம்பவத்தின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் வெறுப்பைத் தூண்டும் குற்றமாக காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
புளோர் மேற்கு Bloor Street West மற்றும் டோவர் கோர்ட் Dovercourt Road பகுதியில் ஒரு தாக்குதல் தொடர்பான தகவலைப் பெற்ற போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட நபர் வாகனத்தில் நின்றபோது, பாதையில் நடந்து வந்த ஒருவர் இனக்குரோத அடிப்படையில் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்தந பர் இனவெறிப் பேச்சுகளை உரைத்ததாகவும், பின்னர் நபரை தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதனால், வாகன ஓட்டுநருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் பின்னர் சந்தேக நபரை அடையாளம் கண்டறிந்து,கைது செய்துள்னர்.
டொராண்டோவையைச் சேர்ந்த 52 வயதான க்ளென் மெக்டொனால்ட் என்பவரேஇவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.