கனடாவில் பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் வெடித்த கார்; ஒருவர் கைது
கனடாவின் ஒஷாவா பகுதியில் கார் ஒன்று வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒஷாவா பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் இந்த கார் வெடித்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பொலிஸார் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சென்டர் வீதி மற்றும் பொன்ட் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள மத்திய கிழக்கு பிரிவு பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக டர்ஹம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெடிப்புச் சம்பவம் காரணமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் காணப்படுவதாகவும், விசாரணைகளின் பின்னரே மேலதிக தகவல்களை வெளியிட முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.