பிராம்ப்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய ஒருவர் கைது
பிராம்ப்டனில் கடந்த 2024ம் ஆண்டு ஒக்டோபர் 15ம் திகதியன்று இடம்பெற்ற டோ டிரக் சார்ந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இன்னொருவர் தேடப்பட்டு வருகின்றார், என பீல் பகுதி காவல்துறை தெரிவித்துள்ளது.
போவாயிர்ட் டிரைவ் என்ட் மவுன்டானிஸ் டார்பாராம் வீதிக்கு Bovaird Drive & Mountainash Road, Torbram Road அருகே உள்ள ஒரு நிறுத்துமிடத்தில், இரண்டு டோ டிரக் நிறுவனங்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
சூடு சம்பவத்தின் போது ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 33 வயதான சர்ப்ஜித் சிங் (Sarbjit Singh) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 வயதான ஜோபன்ஜித் சிங் (Jobanjit Singh) மீது கொலை முயற்சி மற்றும் அனுமதியில்லா துப்பாக்கி வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.