கனடாவில் 2 வாரங்களில் 16 கொள்ளைகளில் ஈடுபட்ட நபர் கைது
டொராண்டோ பெரும்பாகம் மற்றும் ஹாமில்டன் பகுதியில் இரண்டு வார காலத்தில் 16 வியாபார நிறுவனங்களில் கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தி ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
பெப்ரவரி 8 முதல் பெப்ரவரி 25 வரை டொராண்டோ, ஹாமில்டன், குஎல்ஃப், பீல், ஹால்டன் மற்றும் நயாகரா பொலிஸாருக்கு 16 கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 14 கொள்ளைகள் நிதி நிறுவனங்களில், மற்ற இரண்டு சில்லறை கடைகளில் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளி ஒற்றையனாக செயல்பட்டு, கத்தியை காட்டி பணம் கொள்ளையிடுவதாகவும், சில இடங்களில் முகத்தை மறைக்க முகமூடி அணிந்திருந்தார்.
ஆறு பொலிஸ் நிலையங்கள் இணைந்து விசாரணை நடத்தியதில், ஓக்வில்லைச் சேர்ந்த அலன் ஹாக்ஸ்மா (52) என்பவரை டொராண்டோ போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆயுத முனையில் 16 கொள்ளைகள் , 7 முறை முகமூடி அணிந்து திருட முயற்சி செய்ததமை, முறை திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.