பலத்த பாதுகாப்பை மீறி பேரணியில் டிரம்பை நெருங்க முயற்சித்த மர்ம நபர்! பரபரப்பு காணொளி
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் குறித்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்த ஜூலை 13 ஆம் திகதி பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் டிரம்ப் மீது நடத்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
ஆனால் தற்போது மீண்டும் பென்சில்வேனியாவில் உள்ள ஜான்ஸ்டவுன் பகுதியில் டிரம்பின் பேரணியில் மர்ம நபர் தடையை மீறி டிரம்பை நெருங்க முயற்சித்த செய்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியான காணொளி காட்சிகளில், தாடி வைத்து கூரோலிங் கிளாஸ் அணிந்த நடுத்தர வயது நபர் ஒருவர், பொதுமக்கள் தடையை மீறி செய்தியாளர்கள் இருந்த பகுதிக்குள் நுழைந்து மேடையில் ஏற முயன்றார்.
Video of the incident. Security in the press pen grabbed him first before he was taken down by law enforcement. pic.twitter.com/Xdw1CZ9dE0
— Taurean Small (@taureansmall) August 30, 2024
அவரை தடுத்து நிறுத்திய பொலிஸ் அங்கிருந்து அழைத்துச் சென்றது. சிறிது நேரத்திலேயே கூட்டத்திலிருந்த மற்றொரு நபரையும் கைவிளங்கிட்டு பொலிஸ் அழைத்துச் சென்றது.
தாடி வைத்த நபருக்கும், இரண்டாவது நபருக்கும் தொடர்பு உள்ளதாக என்று தெரியவரவில்லை.