Snickers சொக்லட் தீம் சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட நபர் ; நண்பர்கள் சொன்ன நெகிழ்ச்சி காரணம்
Snickers தீமில் சவப்பெட்டி வேண்டும் என்று விளையாட்டாக ஒருமுறை கேட்ட நபருக்கு, அவரது விருப்பப்படியே அடக்கம் நடந்துள்ளது.
பிரித்தானியாவில் ஒருவர் Snickers சொக்லேட் வடிவ சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த 55 வயதான பால் புரூம் (Paul Broome), தனது நகைச்சுவை உணர்வுக்காக பெயர் பெற்றவர்.
இறுதி விருப்பம்
அவர் இறப்பதற்கு முன்பு, ஒரு 'Snickers' சொக்லேட் வடிவ சவப்பெட்டியில் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று நகைச்சுவையாக சொல்லிக்கொண்டிருந்த நிலையில் அவரது கடைசி விருப்பத்தை அவரது குடும்பத்தினர் நினைவுபடுத்தி நிறைவேற்றியுள்ளனர்.
அவரது குடும்பம் மற்றும் நண்பர்கள், அவரது நகைச்சுவை உணர்வை கொண்டாடும் வகையில், ஸ்னிக்கர்ஸ் வடிவில் ஒரு சவப்பெட்டியை தயாரித்து அதில் "I'm Nuts" என்ற வாசகத்தையும் சேர்த்துள்ளனர். இந்த வார்த்தை, அவரது நகைச்சுவை தன்மையை பிரதிபலிக்கிறது.
பால் புரூம், கிரிஸ்டல் பாலஸ் FC கால்பந்து அணியின் தீவிர ஆதரவாளராக காணப்பட்டதால் அவரது சவப்பெட்டியில் அந்த அணியின் லோகோ பதிக்கப்பட்டிருந்தது.
அவரின் இறுதி ஊர்வலத்தில், அவருடைய நண்பர்கள் அவரை நினைவுகூரும் வகையில் கைத்தட்டல்களுடன் அவரை அனுப்பி வைத்துள்ளனர். பால் புரூம் இறப்பதற்கு முன்பு, மனநலம் குன்றியவர்களுக்கு உதவி செய்யும் பராமரிப்பு உதவியாளராக பணி புரிந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.