கனடாவில் பள்ளிக்கூடமொன்றின் மீது அச்சுறுத்தல் விடுத்தவர் மீது வழக்கு
கனடாவில் பள்ளிக்கூடமொன்றின் மீத அச்சுறுத்தல் விடுத்ததாக நபர் ஓருவர் மீத வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஒட்டாவா கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் ஒருவருக்கு இவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனோடிக் பகுதியில் உள்ள செயின்ட் மார்க் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியின் மீது இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பள்ளிக்கூட அதிபர் பெற்றோர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளார்.
சமூக ஊடகத்தில் பகிர்ந்த பதிவுகளைப் பற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதற்கு பதிலளிப்பாக பள்ளிக்கு எதிராக மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.