ஸ்காப்ரோ தீ விபத்தில் உயிரிழந்த எட்டு மாத குழந்தை ; ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டு
கனடாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு மாத சிசு பலியான சம்பவம் தொடர்பில் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்காப்ரோவின் புஷ்மில் சதுக்கத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்த வீட்டிலிருந்து 8 வயதான சிசு, 4 வயதான குழந்தை, 39 வயதான ஆண் மற்றும் சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஆகியோர் மீட்கப்பட்டிருந்தனர்.
39 வயதான நபர் தனக்குத் தானே காயம் ஏற்படுத்திக் கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
எட்டு மாத சிசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன் ஏனைய இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
சிசுவின் மரணம் தொடர்பில் 39 வயதான ஜூலியன் டி சூசா என்பவருக்கு எதிராக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.