பொலிசாரை தாக்கி தப்ப முயன்ற நபர் மீது கொலை முயற்சி வழக்கு
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Merritt பகுதியில் பொலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்ப முயன்ற நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் குழந்தை உட்பட காயமடைந்த இருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். ஞாயிறன்று Merritt பொலிசார் லொறி ஒன்றை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர்.
Lytton பகுதியில் திருடப்பட்ட லொறி என கருதியதாலையே பொலிசார் தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் பொலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் தப்ப முயன்ற வாகனத்தை ஒருகட்டத்தில் பொலிசார் தடுத்து நிறுத்தினர்.
இதில் 46 வயது Gerald Cooper என்பவரை காயங்களுடன் பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் பொலிசார் வழக்கு பதிந்துள்ளனர்.
இதனிடையே, Gerald Cooper உடன் லொறியில் பயணம் செய்த 12 வயதுக்கு உட்பட்ட சிறார் ஒருவரையும் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.