கனடாவில் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது
கனடாவின் பிராம்டன் பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பீல் பிராந்திய பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
வாகனம் ஒன்றில் வைத்து இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது நபர் ஒருவர் வாகனத்தில் படுகாயம் அடைந்த நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.
குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் ஓர் படுகொலையை மேற்கொண்டு உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
சம்பவத்தில் உயிரிழந்தவர் மற்றும் கைது செய்யப்பட்டவர் பற்றிய ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
பீல் பிராந்திய பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        