பிராம்ப்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு: ஒருவர் கவலைக்கிடம்!
கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மெக்முர்ச்சி அவென்யூ வடக்கு மற்றும் நெல்சன் வீதி மேற்கு சந்திப்புக்கு அருகில் உள்ள பகுதி ஒன்றில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சுமார் 11:50 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர், உயிருக்கு ஆபத்தான கவலைக்கிடமான நிலையில் உள்ளூர் அதிர்ச்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருவதற்கு முன்பே சந்தேகநபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகந்பர்கள் குறித்த மேலதிக தகவல்கள் எதையும் புலனாய்வாளர்கள் இப்போதைக்கு வெளியிடவில்லை.
எனினும், பொதுமக்களுக்கு வேறு எந்தவிதமான தொடர்ச்சியான அச்சுறுத்தல்களும் இல்லை என பொலிஸார் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.