டொரொன்டோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
டொரொன்டோ நகரின் வட யார்க் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவரை பரிதாபமாக உயிரிழந்த நிலையில் போலீசார் கூறியுள்ளனர்.
வெஸ்டன் மற்றும் ஆல்பியன் சாலைகள் சந்திக்கும் பகுதியில் உள்ள குடியிருப்புத் தொகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகாலை சுமார் 5.20 மணியளவில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, சுமார் 40 வயதுடைய ஒரு ஆண் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார்.
பின்னர் அவர் உயிரிழந்ததாக மருத்துவ பணியாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக டொரொன்டோ பொலிஸாரின் கொலைவிசாரணை பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கி சூடு நடந்த இடம் பற்றி அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், அந்தப் பகுதியில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தின் மேல் மாடியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னணி மற்றும் சூழ்நிலைகள் குறித்த தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.