கனடா மொன்றியலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு! ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
கனடாவின் மொன்றியலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 50 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செயின்ட் லின் லாரன்ஸ் என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குயில்பெல்ட் வீதியில் துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்தாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.
இதன் போது நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு இலக்காகி கிடந்ததாகவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்ற சில நொடிகளில் அந்த இடத்திலிருந்து நபர் ஒருவர் வாகனத்தில் தப்பி செல்வதை கண்டதாக உயிரிழந்தவரின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        