றொரன்டோவை உலுக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்;மிமிக்கோவில் ஒருவர் பலி
றொரன்டோவில் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்ற நிலையில் நேற்றைய தினமும் மிமிக்கோவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மிமிக்கோ அவன்யூ பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிகளுடன் சிலர் சண்டையிட்டு வருவதாக பிரதேச மக்கள் பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த பொது இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு இலக்காகியிருந்த்தனை அவதானித்துள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு அவசர முதலுதவி வழங்கப்பட்ட போதிலும் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவரிவின் விபரங்களோ எதன் காரணமாக இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டது என்பது பற்றியோ பொலிஸார் இதுவரையில் தகவல் வெளியிடவில்லை.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.