ஒட்டாவாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
ஒட்டாவாவின் கிராமப்புற மேற்கு பகுதியில் உள்ள ரிச்ச்மண்ட் அருகே இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒட்டாவா மருத்துவ அவசர சேவைகள் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. விபத்து மன்ஸ்ஃபீல்டு மற்றும் பவுன்லீ சாலைகளுக்கு இடையில் உள்ள ஹன்ட்லி சாலையில் இடம்பெற்றுள்ளது.
மாலை 4:10 மணியளவில், SUV வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டதாக அவசர அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு சிகிச்சை அளிக்க முயற்சிக்கப்பட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபர் தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகவில்லை.
இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.