ரொறன்ரோவில் பட்டப்பகலில் இடம்பெற்ற பகீர் சம்பவம்: ஒருவருக்கு நேர்ந்த சோகம்!
ரொறன்ரோவில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
பெயார்விவ் ஷொப்பிங் மாலின் வாகன தரிப்பிடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுமார் 20 வயது மதிக்கத் தக்க இரண்டு இளைஞர்கள் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாகவே றொரன்டோவில் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.