கனடாவில் மதுபான கொள்ளையில் ஈடுபட்டதாக நபர் ஒருவருக்கு 100க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள்
கனடாவின் டொரொண்டோ நகரில் உள்ள பல மதுபான விற்பனை நிறுவனமான LCBO (Liquor Control Board of Ontario) கடைகளில் கடந்த ஒரு ஆண்டாக தொடர்ச்சியாக நிகழ்ந்த மது கொள்ளைகளுடன் தொடர்புடையதாக ஒரு 42 வயதுடைய நபர் மீது 100க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டொரொண்டோ காவல்துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த கொள்ளைகள் 2024 ஏப்ரல் 13 முதல் 2025 ஏப்ரல் 11 வரை நடைப்பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பெரிய அளவில் மதுபானங்களை திருடி, செலுத்தாமல் கடையைவிட்டு சென்றுள்ளார் எனவும் மொத்தமாக சுமார் $30,000 மதிப்புள்ள மதுபானங்கள் திருடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் LCBO விசாரணையாளர் குழுவுடன் இணைந்து செயற்பட்ட காவல்துறையினர், சந்தேகநபரை அடையாளம் கண்டதாக தெரிவித்துள்ளனர்.
வீடற்றவரான குறிப்பிடப்படும் சத்வீர் சிங் தூர் (Satvir Singh Toor) என்பவருக்கு எதிராக இவ்வாறு 100க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும் தகவல்கள் உள்ளவர்கள் 416-808-2300 என்ற எண்ணிலோ, அல்லது Crime Stoppers ஊடாக அநாமதேயமாகவும் தகவல் வழங்கலாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.