டொராண்டோவில் 50 வயது நபர் மீது கத்தி குத்து தாக்குதல்
டொராண்டோ நகர மையத்தில் இடம்பெற்ற வெட்டு சம்பவத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் படுகாயமடைந்துள்ளார்.
டொராண்டோ பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். ரிச்மண்ட் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் பாதர்ஸ்ட் ஸ்ட்ரீட் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
50-களில் உள்ள ஒரு ஆண் பலத்த காயங்களுடன் கண்டறியப்பட்டு, பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில் 40-களில் உள்ள ஒரு ஆணை அதிகாரிகள் கைது செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் சிறு காயங்களுடன், ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கான பின்னணி குறித்த தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.