றொரன்டோவில் நபர் ஒருவர் மர்மமான முறையில் கொலை
றொரன்டோவில் நபர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யுனிவர்சிட்டி வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸார் விரைவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னதாக மருத்துவ உயிர்காப்பு உதவியாளர்களுக்கு அழைப்பு ஏற்படுத்தி உதவி கோரப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த உயிர் காப்பு மருத்துவ உதவியாளர்கள், குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்
. இந்த சம்பவம் தொடர்பில் சில நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் பொலிஸாரிடம் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.