கனடாவில் லாரி மோதி விபத்து – 24 வயது இளைஞர் பலி!
கனடாவின் ஒன்ராறியோவை ஒட்டிய மனிடோபா மாகாணத்தில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் 24 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த வாரம் இரவு சுமார் 10:50 மணியளவில், மனிடோபா மாகாணத்தில் உள்ள கிரஹாம்தேல் பகுதியில் உள்ள 6-வது நெடுஞ்சாலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
தெற்காகச் சென்ற ஒரு லாரியும், வடக்காக வந்த ஒரு செமி-லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் லாரியை ஓட்டிச் சென்ற 24 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் பயணித்த 28 வயது நபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, வின்னிபெக் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டார். செமி-லாரி ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.
முதல் விபத்தில் நேரடித் தொடர்பு இல்லாத மற்றொரு லாரி, ஏற்கனவே விபத்துக்குள்ளான வாகனங்களில் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து வடக்குப் பக்க பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்தது.
அதிர்ஷ்டவசமாக, அந்த லாரியிலிருந்த மூவர் உடனடியாக வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதனிடையே, தீப்பிடித்த லாரியின் ஓட்டுநர் காவல்துறையினர் வருவதற்கு முன்பே அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
அவரைத் தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த விபத்துக்கான உண்மையான காரணம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.