சிட்னி வர்த்தக நிலையத்திற்குள் கத்தியுடன் ஓடிய நபரால் பரபரப்பு!
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள ஒரு பரபரப்பான வர்த்தக நிலையமொன்றுக்குள் கத்தியுடன் சந்தேகத்திற்கிடமாக ஓடிய நபர் ஒருவர் பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (29) பிற்பகல் 1 மணியளவில் வர்த்தக நிலையத்திற்குள் ஆயுதம் ஏந்திய ஒருவர் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அவசர சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து வர்த்தக நிலையத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் 21 வயதான சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
உணவு விடுதியில் இருந்து பெறப்பட்ட காட்சிகளில், தரையில் இருந்த ஒரு சந்தேக நபரை பொலிஸார் சுற்றி வளைத்து பிடிப்பதைக் காட்டுகின்றது.
அதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மவுண்ட் ட்ரூட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.