கனடாவில் ஒருவர் மீது விசித்திரமான தாக்குதல்
வான்கூவாரில் நபர் ஒருவர் மீது அம்பு எய்தி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் நெஞ்சுப் பகுதியில் குறித்த நபருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நபர் மீது அம்பு எய்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக வான்கூவார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலக்கு வைக்கப்பட்டு இந்த அம்புத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூடாரங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பாரிய அனர்த்தம் நேரிடும் என தீயணைப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த மக்கள் சமூகம் வாழ்ந்து வரும் பகுதியில் அடிக்கடி கத்தி குத்து தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வன்முறைச் சம்பவங்களும் குற்றச் செயல்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கூடாரங்களில் வாழ்ந்து வரும் மக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.