மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையோடு தெருவில் உலா வந்த நபரால் பரபரப்பு!
ஈரான் நாட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி தனது மனைவியின் தலையை வெட்டி அவருடைய தலையுடன் கணவர் தெருவில் உலா வந்த நிகழ்வு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கொல்லப்பட்டவர் மோனா ஹெய்டாரி (Mona Heidari) என்ற 17 வயது பெண்ணின் தலை என்பதை கண்டுபிடித்தனர்.
ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள அஹ்வாஸ் நகரில் உள்ள பெண்ணின் குடியிருப்பில் சோதனை நடத்தினர். அங்கு மறைந்திருந்த பெண்ணின் கணவர் மற்றும் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. பல ஈரானிய செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் ஈரானின் பெண்கள் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் என்சிஹ் கசாலி, இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றத்திற்கு அழைப்பு விடுத்ததுடன், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் கூறினார்.
அதேசமயம் ஹெய்டாரியின் (Mona Heidari) கொலையைத் தொடர்ந்து, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்களைச் சீர்திருத்தவும், பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை உயர்த்தவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதேவேளை ஈரானில் 2020ஆம் ஆண்டு தனது மகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய தந்தைக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



