டொரொண்டோ உணவகத்தில் தாக்குதல் – சந்தேகநபரைத் தேடும் பொலிஸார்
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை டொரொண்டோ பொலிஸார் தேடி வருகின்றனர்.
ரொன்செஸ்வால்ஸ் அவென்யூ மற்றும் ஹாவர்டு பார்க் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், இரவு 11:00 மணிக்கு முன்பாக ஒருவர் தாக்கப்பட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபர் உணவகத்திற்குள் நுழைந்து அங்கு இருந்தவரை தாக்கிவிட்டு, தெற்கே ரொன்செஸ்வால்ஸ் அவென்யூ வழியாக தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர் கடுமையாக காயமடையவில்லை என்றாலும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் சுமார் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்துக்கு தொடர்புடைய தகவல்கள் உள்ளவர்கள் உடனடியாக காவல்துறையினரையோ, கிரைம் ஸ்டாப்பர்ஸ் அமைப்பினரையோ தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.