ரயிலில் ஜோக்கர் வேடத்தில் வந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய நபர்
ஜப்பானில் ஓடும் ரயிலில் " ஜோக்கர்" வேடத்தில் வந்த நபர் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
பேட்மேன் திரைப்படங்களில் வரும் வில்லன் கதாபாத்திரமான ஜோக்கர் வேடத்தில் வந்த 24 வயது நபர், சக பயணிகள் மீது கத்தி மற்றும் ஆசிட் வீசித் தாக்கத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது.
மேலும் அவன் நிகழ்த்திய சிறிய குண்டு வெடிப்பால் ரயிலில் தீ பற்றி எரிந்ததாகவும் கூறப்படுகின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அடுத்தடுத்த பெட்டிகளை நோக்கி ஓடியும் சிலர் ரயில் ஜன்னல்கள் வழியாக குதித்தும் தப்பியுள்ளனர்.
இதனிடையே உடனடியாக நிறுத்தப்பட்ட ரயிலில் இருந்த தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.