அவசர அவசரமாக மூடப்பட்ட பிரிட்டனின் முக்கிய விமான நிலையம்: வெளியான காரணம்
கடுமையான பனிப்பொழிவு காரணமாக மான்செஸ்டர் விமான நிலையம் அதன் இரண்டு ஓடுபாதைகளையும் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிக விரைவில் விமான நிலையம் செயல்பாட்டுக்கு திரும்பும் எனவும், பயணிகள் தங்கள் விமான சேவை நிறுவன அலுவலகங்களை தொடர்பு கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிரிட்டனின் குறிப்பிட்ட பகுதிகளில் வெப்பநிலை -10C என சரிவடைந்துள்ளதுடன் பனிப்பொழிவு, கடும் குளிர் மற்றும் பயண சிக்கல் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு யார்க்ஷயரில் உள்ள டாப்க்ளிஃப் பகுதியில் வெப்பநிலை -7.4C என பதிவாகியுள்ளது. இதனிடையே, வடக்கு மற்றும் தென்மேற்கு ஸ்கொட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவுக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு ஸ்காட்லாந்தின் குறிப்பிட்ட பகுதிகளில் 34cm அளவுக்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
மேலும், பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு ஏஜென்சியால் மூன்றாம் நிலை குளிர் காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது நோய் தாக்கும் ஆபத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.