கனடாவில் கைதி ஒருவர் தப்பி ஓட்டம்
கனடாவில் சஸ்கட்ச்வான் பகுதியில் கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
பிரின்ஸ் அல்பர்ட் பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
29 வயதான கிளென் பேட்டரிக் ரிச்சர்ட் ஆல்கட் என்ற நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
5 அடி 8 அங்குல உயரத்தைக் கொண்ட 168 பவுண்ட் எடையை கொண்ட நபர் ஒருவரை இவ்வாறு காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பி சென்றவரை கைது செய்வதற்கு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபர் இரண்டு ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.
வீடுடைப்பு வாகன கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களின் அடிப்படையில் இவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்திருந்தது.