பிரான்ஸில் பெய்த ஆலங்கட்டி மழையில் பலர் காயம்
பிரான்ஸில் நேற்று பல்வேறு பகுதிகளில் பதிவான இடியுடன் கூடிய பலத்த ஆலங்கட்டி மழையில் பலர் காயமடைந்துள்ளதுடன் வீடுகளும் சேதமடைந்துள்ளன.
Indre, Lori-et-Cher, Nemours மற்றும் Seine-eat-Marne ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பதிவாகியுள்ளது. சில பகுதிகளில் டென்னிஸ் பந்து அளவில் ஆலங்கட்டிகளும் விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.
Indre மற்றும் Lori-et-Cher மாவட்டங்களில் ஆலங்கட்டிகள் விழுந்ததில் பல வீடுகள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளத. இந்நிலையில் 200 இடங்களில் மீட்புப்பணி இடம்பெற்றதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
அதேவேளை, ஆலங்கட்டி விழுந்ததில் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரிய சத்தத்துடன் ஆலங்கட்டிகள் விழுவதை மக்கள் சிலர் காணொளியாக படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அதேவேளை முன்னதாக, கடந்த வாரம் முழுவம் பிரான்சை கடும் வெப்பம் வாட்டியிருந்தது. அதிகபட்சமாக 43 பாகை செல்சியஸ் வரை வெப்பம் வரை பதிவாகி முந்தைய சாதனைகள் அனைத்தும் முறியடிக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.