குடும்பத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பலர் பலி
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட நிலையற்ற போர்நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், நேற்று காசாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில், ஈரான் போரினால் பாரசீக வளைகுடாவில் ஆயிரக்கணக்கான மாலுமிகள் சிக்கி தவிக்கின்றனர்.

இத்துடன், ரஷ்யா உடனான எரிசக்தி ஒப்பந்தத்தை ஈரான் முன்னிலைப்படுத்தி வருகிறது, மேலும் ஈரானுடனான தொடர்புகளுக்காக ஒரு முக்கிய எகிப்திய வங்கி மீது அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
காசாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கான் யூனிஸ் (Khan Younis) பகுதிக்கு வெளியே இருந்த ஒரு குடும்பத்தின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு சகோதரர்களும் மற்றொரு உறவினரும் உயிரிழந்ததாக நாசர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கான் யூனிஸில் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து தங்களுக்கு தெரியாது என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
நேற்று (வெள்ளிக்கிழமை) காசா நகரில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி இஸ்ரேலிய தாக்குதல்களில் தலா ஒருவர் வீதம் கொல்லப்பட்டதாக ஷிஃபா மருத்துவமனை சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.