லிபரல் கட்சி தலைமை பதவிக்கு போட்டியிடும் மார்க் கர்னி
கனடிய லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடும் மார்க் கர்னி இன்றைய தினம் தனது பிரசாரத்தை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எட்மாண்டனில் அவர் தனது பிரசாரத்தை ஆரம்பிப்பார் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கனடிய வங்கியின் முன்னாள் ஆளுநரான மார்க் கர்னி தான் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.
லிபரல் கட்சியின் தலைவராக கடமை ஆற்றிய தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து அந்த பதவி வெற்றிடத்திற்கு லிபரல் கட்சியின் சில முக்கியஸ்தர்கள் போட்டியிட தீர்மானித்துள்ளனர்.
அந்த வகையில் மார்க் கர்னி அதிகாரப்பூர்வமாக இன்றைய தினம் தனது பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் கட்சியின் தலைமை பதவி தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளது.
மேலும் லிபரல் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்பவர் பிரதமர் பதவியும் வகிக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.
கனடாவில் அடுத்த பொது தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நடைபெற உள்ளது.
அந்த காலப்பகுதி வரையில் பிரதமர் பதவியையும் லிபரல் கட்சியின் புதிய தலைவர் வகிக்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன.