கனடாவில் பிரபல நிறுவனத்தின் காபியில் கரப்பான் பூச்சி
கனடாவின் மார்கத்தில் வசிக்கும் ஒரு பெண், முன்னணி உணவுப் பொருள் விற்பனை நிறுவனமான ரிம் ஹோர்டன்ஸ் Tim Hortons நிறுவனத்தின் ஐஸ் காஃபியில் கரப்பான் பூச்சி (cockroach) கிடந்ததாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு உணவகத்திடமிருந்து எதிர்பார்த்த முறையில் பதில் கிடைக்கவில்லை எனவும், சட்ட நடவடிக்கை எடுப்பதை பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 10ம் திகதி Scarborough பகுதியில் உள்ள Golden Mile Tim Hortons கிளையில் (4 Lebovic Ave) இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
சுபானா பீரா, தனது ஆறு நண்பர்களுடன் ரமழான் நோன்பு முடித்த பிறகு இரவு 9:15 மணியளவில் அந்த கடையில் கூடிச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் நான்கு பானங்களை ஆர்டர் செய்தனர். மூன்று பானங்களை பருகியபோது, அவருடைய காப்பியில் பெரிய பூச்சி இருப்பதை கண்டதாக தெரிவித்துள்ளார்.
"நான் ஒரு கரும் தழும்பைக் கண்டேன், அது மிகப் பெரிய பூச்சியாக இருந்தது. அதற்கு நேர்த்தியான மீசை (antenna) இருந்தது," என்று பீரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நர்சிங் படிக்கும் பீரா, "நான் பருகிய பானம் அசுத்தமாக இருந்ததால் உடனே வாந்தி எடுக்கும் பொருட்டு கழிவறைக்கு ஓடினேன்.
எனது நண்பர்களும் அதே நிலைமையை சந்தித்தனர். பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது" என கூறினார்.
இந்த சம்பவத்திற்கு கடை ஊழியர்களின் "அமைதியான" எதிர்வினை, நிலைமையை மேலும் மோசமாக்கியது.
பீரா கூறுகையில், "நாங்கள் நான்காவது பானத்தை ரத்து செய்து, மீதமுள்ள மூன்றிற்கும் பணத்தை திருப்பிச் செலுத்துமாறு கேட்டோம். ஊழியர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள்" என்று கூறினார்.
இச்சம்பவம் காணொளியாக பதிவு செய்யப்பட்டு ஊடகங்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
கடையின் பணியாளர்கள் அளித்த பதில் அசமந்தப் போக்கானது எனவும் இதனால் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து உத்தேசித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.