அமெரிக்காவில் சிறுவர்கள் உட்பட பலரை காவு வாங்கிய பேரழிவு ; உயர்ந்த பலி எண்ணிக்ககை
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு 15 சிறுவர்கள் உட்பட 43 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 850ற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
பலர் உயிரிழப்பு
அமெரிக்காவின், தென்- மத்திய டெக்சாஸ் மாகாணத்தின், மலைப் பகுதியில் அமைந்துள்ள கெர் கவுன்டியில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குவாடலூ ஆற்றில் 45 நிமிடங்களில் 26 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்து, கரையிலிருந்த குடியிருப்புகளை வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு பலர் உயிரிழந்ததுடன், பலர் காணாமலும் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் மீட்புப் படையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்