அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு! 3 பேர் பலி
அமெரிக்க நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், புளோரிடா மாகாணம் ஜாக்சன்வெலி பகுதியில் இன்றைய தினம் (27-08-2023) துப்பாக்கிச்சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜாக்சன்வெலி பகுதியில் வெள்ளை இனத்தவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கருப்பினத்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண், இரு ஆண்கள் என கருப்பினத்தவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஆனால், பொலிஸார் வருவதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய வெள்ளை இனத்தவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.