நெதர்லாந்தில் இடம் பெற்ற பாரிய விபத்து; 30 பேர் காயம்
நெதர்லாந்தில் இன்று காலை பாரிய தொடரூந்து விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
மேற்கு நெதர்லாந்தில் பயணிகள் தொடரூந்து சரக்கு தொடரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்திருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி சுமார் 30 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்திருப்போரை சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கும் பணிகளை நெதர்லாந்து அவசர சேவைகள் மற்றும் வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த தொடரூந்து விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த தொடரூந்து விபத்து காரணமாக லைடன் மற்றும் ஹேக் பகுதிகளுக்கு இடையிலான தொடரூந்து சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தொடரூந்து சேவை தெரிவித்துள்ளது.