ரோஹிங்கியா அகதி முகாமில் பெரும் தீ விபத்து! நிர்க்கதிக்குள்ளான மக்கள்
பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், சுமார் 1,200 குடிசைகள் எரிந்துள்ள நிலையில், . ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் குடியிருப்பை இழந்தனர்.
இந்த தீ விபத்து காக்ஸ் பஜாரின் உக்கியாவில் உள்ள அகதிகள் முகாமிலேயே ஏற்பட்டது. மூங்கில், தார் பூசிய கித்தான் துணி போன்றவற்றால் அமைக்கப்பட்ட முகாமின் பகுதிகளில் தீ மிக விரைவில் பரவிய நிலையில், சுமார் 2 மணி நேரத்துக்குள் முகாமில் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
எரிவாயு சிலிண்டர் வெடித்ததை தொடர்ந்து இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில், வீடுகள், பாடசாலைகள், மருத்துவ மையங்கள் என்பன இந்த தீயில் அழிந்துள்ளன.
மியன்மாரிலிருந்து தப்பி வந்த ரோஹிங்கியா மக்கள், 2017ஆம் ஆண்டு முதல் காக்ஸ் பஜாரில் உள்ள அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த முகாமில் இங்கு சுமார் 850,000 ரோஹிங்கியாக்கள் தங்கியிருக்கின்றனர்.
அதேவேளை பங்களாதேஷிலுள்ள வசதியற்ற ரோஹிங்கியா அகதி முகாம்களில் அடிக்கடி இது போன்ற தீ விபத்து ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.