உலகப் புகழ்பெற்ற டுமாரோலேண்ட் இசைத் திருவிழா மேடையில் பாரிய தீ
பெல்ஜியத்தின் உலகப் புகழ்பெற்ற டுமாரோலேண்ட் இசைத் திருவிழா வெள்ளிக்கிழமை (18) ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், பிரதான மேடையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
"தீ விபத்தினால் டுமாரோலேண்ட் இசைத் திருவிழாவின் பிரதான மேடை கடுமையாக சேதமடைந்துள்ளது," என விழா ஏற்பாட்டாளர்கள் புதன்கிழமை (16) மாலை ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
"சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்." இந்த தீவிபத்து சம்பவம் பூம் நகரில் இடம்பெற்றுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டபோது விழாவிற்கு வந்தவர்கள் யாரும் அங்கு இருக்க வில்லை, ஆனால் சுமார் 1,000 ஊழியர்கள் இருந்ததாகவும், அவர்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.