கனடிய விமான நிலையங்களில் ஏற்பட்ட ஸ்தம்பித நிலை குறித்து விளக்கம்
கனடிய விமான நிலையங்களில் அண்மையில் ஏற்பட்ட ஸ்தம்பித நிலைமை குறித்து கனடா எல்லைச் சேவைகள் முகமை (Canada Border Services Agency – CBSA) நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அண்மையில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப கோளாறு (IT outage) இணையத் தாக்குதல் காரணமாக அல்ல, மாறாக அடிக்கடி மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 28ஆம் திகதி நிகழ்ந்த இந்த கோளாறு “வழக்கமான சிஸ்டம் பராமரிப்பு பணிகளின் போது ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்ப பிரச்சனை” என விளக்கப்பட்டுள்ளது.
இந்த கோளாறு சுமார் 48 மணிநேரத்திற்குள் சரிசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த காலத்தில் விமான நிலையங்களில் தன்னியக்கச் சோதனை இயந்திரங்கள் (inspection kiosks) செயலிழந்ததால், அதிகாரிகள் கைமுறையில் பயணிகள் மற்றும் சரக்குகளைச் சோதிக்க வேண்டியிருந்தது, இதனால் பெரும் தாமதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.