லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பாரிய சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பூமிக்கு அடியில் 18 மீட்டர் அகலத்தில் கழிவுநீர் வெளியேற்றுவதற்காக 60,000 கோடி ரூபாவில் புதிதாக சுரங்கம் அமைத்து பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்டத்தில் சுமார் 150இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு-பகல் பாராமல் வேலை பார்த்து வருகிறார்கள். சுமார் 75 சதவீதத்திற்கு மேல் இந்த புதிய சுரங்கம் அமைக்கும் பணி முடிவடைந்தது.
இந்நிலையில் சுரங்கம் தோண்டுவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்ததால் கூடுதலாக தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு மும்முரமாக பணி நடந்து வந்தது.
அப்போது அந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. தகவலறிந்த மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 31 தொழிலாளர்கள் சிக்கியிருப்பது தெரிந்தது.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சுரங்கத்தில் சிக்கிய 31 தொழிலாளர்களும் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.