பருவநிலை மாற்றம் தொடர்பில் பேச 4,000 மைல்கள் பறந்து சென்ற பிரித்தானிய மேயர்
கனடாவில் பருவநிலை மாற்றம் தொடர்பில் 14 நிமிடங்கள் பேச பிரித்தானிய மேயர் ஒருவர் 4,000 மைல்கள் பறந்து சென்ற விவகாரம் விவாதமாகியுள்ளது.
பருவநிலை நெருக்கடியைச் சமாளிக்க தலைவர்கள் எவ்வாறு உதவ முடியும் என்ற விளக்க உரைக்காக பிரிஸ்டல் மேயர் மார்வின் ரீஸ் ஒன்பது மணி நேர விமான பயணம் மேற்கொண்டு வான்கூவருக்கு சென்றுள்ளார்.
ஆனால் பருவநிலை மாற்ற ஆர்வலர்கள் வெளியிட்ட தகவலில், பிரிஸ்டலில் இருந்து வான்கூவர் வரையிலான அவரது பயணம் 2.7 டன் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றியிருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
பிரிஸ்டல் நகரை பொறுத்தமட்டில் பருவநிலை மாற்ற நெருக்கடியை அறிவிக்கும் சூழலில் உள்ளது. ஆனால் நகர மேயர் ரீஸ் அது தொடர்பில் கவலைப்பட்டதாக தெரியவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நமது தலைவர்கள் தேவையற்ற விமான பயணங்களை தவிர்த்தாலே, கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.