இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மருத்துவ அதிகாரிகள் காயம்
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் இரண்டு மருத்துவ அதிகாரிகள் காயமடைந்ததாகவும் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அல்-கராமா கோபுரத் தாக்குதலில் காயமடைந்தவர்களை வெளியேற்றும் நடவடிக்கையின் போதே அம்பியூலன்ஸ் மீது தாக்குதல் இடமபெற்றதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுபவர்கள் உட்பட காசாவில் உள்ள பொதுமக்களை இஸ்ரேலியப் படைகள் தாக்குவதாகவு பாலஸ்தீனியர்கள் நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
அத்துடன் அம்பியூலன்ஸ்கள் மற்றும் அவசரகால மீட்பு பணியினர் பலத்த காயமடைந்த பாலஸ்தீனியர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.