இளவரசர் வில்லியமுடன் சந்திப்பு; கைகளை கழுவ போவது இல்லை ; உற்சாகத்தில் குதித்த மாணவன்!
வேல்ஸ் இளவரசர் வில்லியமுடன் கைகுலுக்கிய பிறகு, இனி தன் கைகளை கழுவ போவது இல்லை என பள்ளி மாணவர் ஒருவர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்ற பிறகு, வேல்ஸின் புதிய இளவரசராக வில்லியமும் இளவரசியாக கேட் மிடில்டனும் பட்டம் பெற்றனர்.
மகாராணியின் மறைந்த துக்கம் கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில், வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் வியாழனன்று அரசுமுறை சுற்றுப்பயணமாக வடக்கு அயர்லாந்திற்கு சென்று இருந்தனர்.
அப்போது வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் (Belfast) நகரில் கூடி இருந்த பள்ளி மாணவர்கள் மற்றும் அரச குடும்ப ரசிகர்களை சந்திப்பதற்காக வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் நடைப்பயணம் மேற்கொண்டனர்.
இந்த பயணத்தின் போது அங்கு திரண்டு இருந்த மாணவர்களுடன் வேல்ஸ் இளவரசர் வில்லியம் கைகுலுக்கி கொண்டதுடன், “உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி“ என தெரிவித்தார்.
இதற்கிடையில் வேல்ஸ் இளவரசர் வில்லியமுடன் கைகுலுக்கிய மாணவன் ஒருவன், தனது கைகளை இறுக்க மடக்கி “போ, இனி என் வாழ்க்கையில் கையை கழுவ போவதே இல்லை” என உற்சாகத்தில உரக்க கத்துவது பதிவாகி உள்ளதுடன் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவிவருகிறது.
இந்த நிலையில் வடக்கு அயர்லாந்து சுற்றுப்பயணம் தொடர்பாக வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் அவர்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் எழுதியுள்ளனர்,
Prynhawn Da Swansea! Thank you to everyone we saw at @StThomasSwansea this afternoon.
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) September 27, 2022
It was fantastic to join the team supporting their community with everything from facilities for the homeless to a foodbank and brilliant baby bank, Baby Basics. What a special community hub! pic.twitter.com/GMjxNYpk5d
அதில் “எங்களுடன் இருந்ததற்கு நன்றி, வடக்கு அயர்லாந்து! என தெரிவித்துள்ளனர். இதே சுற்றுப்பயணத்தில் இளவரசி கேட் மிடில்டனை எதிர்கொண்ட பெண்மணி ஒருவர் “தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, இருப்பினும் இது உங்கள் சொந்த நாட்டில் இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்” என தெரிவித்தார்.
அதோடு கைபேசியில் அதனை வீடியோ எடுத்துக் கொண்டு இருந்த அந்த பெண்மணி மேலும் அயர்லாந்து ஐரிஷ்(Irish) மக்களுக்கே சொந்தமானது எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.