பிரிட்டன் மகாராணி- அதிபர் ஜோபைடன் சந்திப்பு; வெளியானது அதிகாரபூர்வ தகவல்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்( Joe Biden) இங்கிலாந்து Cornwall-ல் நடக்கவுள்ள ஜி-7 மாநாட்டிற்காக இந்த மாதம் பிரிட்டனிற்கு வருகை தர உள்ளார். இதன்போது அவர் பிரிட்டன் மகாராணியாரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அவர்கள் சந்திப்பிற்கான திகதி மற்றும் இடம் தொடர்பான தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்திருக்கிறது. அதன்படி ஜோ பைடன்( Joe Biden), ஜி-7 மாநாட்டிற்கு பின்பு ஜூன் 14ஆம் தேதியன்று, Brusselsக்கு நேட்டோ கூட்டத்திற்காக செல்வார்.
அதற்கு முன்பாக அவர் தன் மனைவி ஜில்லுடன்(Jill Biden) 13ஆம் திகதி பிரிட்டன் மகாராணியாரை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , அதிபராக பொறுப்பேற்ற பின்பு ஜோ பைடன் ( Joe Biden)முதன்முதலாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். அத்துடன் பிரிட்டன் மகாராணியார் சந்திக்கப்போகும் 13வது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ( Joe Biden) ஆவார்.
இதேவேளை ராணி தன் 69 வருட ஆட்சி காலத்தில் அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சனை(Lyndon Johnson) மட்டும் சந்தித்ததில்லை. ஏனெனில் அவரின் பதவி காலத்தில் அவர் பிரிட்டனுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.