ட்ராம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவாரா? மெலினா விளக்கம்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ட்ராம்பின் மனைவி மெலினா ட்ராம்ப் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ட்ராம்ப் போட்டியிடும் சாத்தியங்கள் பற்றி அவர் ஊகங்களை வெளியிட்டுள்ளார்.
மீண்டும் வெள்ளை மாளிகையில் வசிப்பதற்கு சாத்தியம் உண்டு என மெலினா சுட்டிக்காட்டியுள்ளார்.
கணவர் ட்ராம்ப் மீளவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என எழுப்பிய கேள்விக்கு எதனையும் திட்டவட்டமாக மறுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
ஜோ பெய்டனின் ஆட்சி சரியில்லை எனவும், தாங்களது ஆட்சி காலத்தில் நாட்டுக்கும் உலக மக்களுக்கும் பல்வேறு நன்மைகள் செய்ததாகவும் மெலினா தெரிவித்துள்ளார்.