கனடா பிரதமரின் பிரதான ஆலோசகர் ராஜினாமா
கனடா பிரதமர் மார்க் கார்னியின் அலுவலகத்தில் (PMO) முக்கிய ஆலோசகராக உள்ள மார்கோ மெண்டிசினோ, இந்த கோடையில் தனது பதவியை விட்டு விலக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.
"நாங்கள் அக்கிராசன உரைக்கு (Throne Speech) தயாராகும் போது, பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பணிகளைத் தொடங்கும் முக்கிய கட்டத்தில் மேண்டிசினோ தொடர வேண்டும் என கோரியதாகவும், அவர் ஒப்புக்கொண்டதில் நன்றி," எனவும் பிரதமர் கார்னி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மெண்டிசினோ, முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு காலத்தில் பொது பாதுகாப்பு அமைச்சராகவும், அதற்கு முன் குடிவரவு அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் லிபரல் தலைமை தேர்தலில் கார்னி வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றபோது, தற்காலிக அடிப்படையிலான ஆலோசகராக மெண்டிசினோ நியமிக்கப்பட்டார்.
ஆனால் இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
மெண்டிசினோ தனது பதவியை விட்டு விலகும் பின்னணியில், அவர் டொரொன்டோவின் அடுத்த மேயராக போட்டியிடும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.