கொள்ளையை தடுத்த மாணவரின் மருத்துவ கட்டணம் ரத்து
கனடாவில் கொள்ளைச் சம்பவமொன்றை தடுக்க முயன்று காயமடைந்த மாணவரின் மருத்துவ கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மிராஜ் அஹமட் என்ற சர்வதேச மாணவரின் மருத்து கட்டணங்கள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வான்கூவாரில் இடம்பெற்ற இந்த கொள்ளையை தடுக்க முயற்சித்த போது, அஹமட் காயமடைந்திருந்தார்.
கொள்ளையர்கள் மாணவனை கடுமையாக தாக்கியிருந்தனர்.
பங்களாதேஸை சேர்ந்த மிராஜ் அஹமட் என்ற இந்த மாணவனின் இடது கரத்தில் கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இணைய வழியில் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி சந்திக்க வந்தவர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான போது குறித்த மாணவர் காப்புறுதி எதனையும் செய்து கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
காப்புறுதிக்காக விண்ணப்பம் செய்திருந்த காரணத்தினால் இவ்வாறு கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.