கனடா குடியுரிமைக்கு அமெரிக்கர்களிடையே அதிகரிக்கும் ஆர்வம்
அமெரிக்காவில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்கள் மற்றும் சமூக உரிமை குறித்த அச்சம் காரணமாக, கனடாவுடன் குடும்ப தொடர்புகள் கொண்ட அமெரிக்கர்கள் மத்தியில் கனடா குடியுரிமையை மீண்டும் பெறும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது என குடிவரவு சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
அதிகரிக்கும் இந்த விண்ணப்பதாரர்களில், மாற்றுப் பாலின சமூகத்தைச் சேர்ந்த பலரும் இடம்பெயர்வு முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
இவர்களும், அமெரிக்காவில் உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் குறைந்து வருவதில் கடும் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
“அமெரிக்க அரசின் தற்போதைய போக்கில் மக்கள் பலர் தங்களை பாதுகாப்பற்ற நிலையில் உணர்கிறார்கள்,” என குடிவரவு சட்டத்தரணி சான்டல் டெஸ்லோஜ்ஸ சுட்டிடக்காட்டியுள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகாரங்கள் மீண்டும் வலுப்பெறும் சூழல், குறிப்பாக சமூகத்தில் சில பகுதியில் கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்படும் நிலை மக்கள் மனதில் அச்சத்தை உருவாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மேலும் பல குடும்பங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி கனடாவுக்கு இடம்பெயர விரும்புவதாக, மற்றொரு குடிவரவு சட்டத்தரணி மேக்ஸ் சௌதரி கூறியுள்ளார்.