குழந்தைகள் பாதுகாப்பு விவகாரம் ; மெட்டா நிறுவனத்துக்கு 567 மில்லியன் டொலர் அபராதம்
மெட்டா நிறுவனத்துக்கு ரூ.5,400 கோடி அபராதம் விதித்து அமெரிக்கா கோர்ட்டு பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக ஊட கங்களின் தாய் நிறுவனமான மெட்டா மீது அந்த செயலிகளால் குழந்தைகளின் மனநலம் பாதிப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை மூடி மறைத்தது தொடர்பாக அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் முதல் கட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 375 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மெட்டா நிறுவனத்திற்கு அபராதத்தை நியூமெக்சிகோ நீதிமன்றத்தில் விதித்திருந்தது.
இந்த நிலையில் இவ்வழக்கின் 2-ம் கட்ட தீர்ப்பை நியூமெக்சிகோ நீதிமன்ற அளித்தது. அதில் தனது சமூக வலைதளங்கள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு இழப்பீடாக 567 மில்லியன் அமெரிக்க டாலர்களை மெட்டா நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.