பேருந்து லொறி மோதி பயங்கர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த 19 பயணிகள்!
மெக்சிகோவின் வடமேற்கே சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு பேருந்து மற்றும் லொறி மோதி கொண்டதில், 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் கடந்த செவ்வாய் கிழமை (30-01-2024) இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த விபத்து சம்பவத்தில் 22 பேர் கடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருதாவது,
குறித்த பேருந்து ஜலிஸ்கோ மாகாணத்தின் குவாதலஜரா நகரில் இருந்து சினலோவா மாகாணத்தின் லாஸ் மொகிஸ் நகரை நோக்கி 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
அப்போது, பஸ் மற்றும் லொறி மோதி கொண்டதில், பஸ் தீப்பிடித்து கொண்டது. இதில், உயிரிழந்த 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.